/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குடும்ப வாழ்க்கை முறை, சேமிப்பு தான் நமது நாட்டின் பலம்'
/
'குடும்ப வாழ்க்கை முறை, சேமிப்பு தான் நமது நாட்டின் பலம்'
'குடும்ப வாழ்க்கை முறை, சேமிப்பு தான் நமது நாட்டின் பலம்'
'குடும்ப வாழ்க்கை முறை, சேமிப்பு தான் நமது நாட்டின் பலம்'
ADDED : நவ 20, 2025 05:22 AM

சூலுார்: நம் பாரத நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதற்கு, குடும்ப வாழ்க்கை முறையும், சேமிப்பும் தான் காரணம், என, சுதேசி விழிப்புணர்வு இயக்க முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் நம்பி நாராயணன் பேசினார்.
முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், 'நமது தேசம் புண்ணிய தேசம்' எனும் மாதந்திர விழிப்புணர்வு சொற்பொழி நடந்து வருகிறது. 46 வது சொற்பொழிவு விவேகானந்தர் அரங்கில் நடந்தது. இயக்க தலைவர் சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் நம்பி நாராயணன் பேசியதாவது:
நமது பாரத நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் தொன்மை வாய்ந்தது. அதேபோல் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வளங்கள் நம் பாரத தேசத்தில் உள்ளன. நமது நாட்டுக்கு என்று பல விதமான பெருமைகள், பண்புகள் உள்ளன. சுய தர்மம், தன்மானம், நமது சுதந்திரம், நமது தாய் மொழி, நமது தேசம் ஆகியவையே நம்மை ஒருங்கிணைக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக மனித வளம் நம் நாட்டின் பொக்கிஷம் ஆகும். மனித வளம் இல்லாத நாடுகள், ரோபோக்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கால்நடை வளம் குறைந்தால் விவசாயம் வீழ்ச்சி அடையும். விவசாயம் குறைந்தால் மக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படும். கடந்த காலத்தில் பசுமாட்டின் சாணத்தை இறக்குமதி செய்யும் நிலை இருந்தது. தற்போது, அதே சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அனைத்து வளங்களும் காப்பற்றப்பட வேண்டும்.
சுய சிந்தனையால் ஒவ்வொரு பொருளும் உருவாக்கப்பட வேண்டும். அவற்றையே நாம் பயன்படுத்த வேண்டும். அதுவே சுதேசி பொருளாதாரம் ஆகும். நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நமது குடும்ப அமைப்பும், அவர்களின் சேமிப்பும் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை எதிர்கால சந்ததிக்கு புரிய வைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

