/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நில அளவை துறையில் 2வது நாளாக வேலை நிறுத்தம்
/
நில அளவை துறையில் 2வது நாளாக வேலை நிறுத்தம்
ADDED : நவ 20, 2025 05:23 AM

அன்னூர்: தாலுகா, உள் வட்டம், நகர சார் ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அவுட் சோர்சிங் மற்றும் காண்ட்ராக்ட் முறையில் பணி நியமனத்தை முற்றிலும் கைவிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ. 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு (சங்கம்) அறிவித்தது. இதன்படி அன்னூர் தாலுகாவில் நேற்றுமுன்தினம் இரண்டாவது நாளாக பெரும்பாலான ஊழியர்கள் நில அளவைத் துறையில் பணிக்கு வரவில்லை. அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
நில அளவை பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நில அளவை செய்யக் கோரி அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

