/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அன்பு, புரிதல், பகிர்வால் குடும்ப உறவுகள் வலுப்படும்'
/
'அன்பு, புரிதல், பகிர்வால் குடும்ப உறவுகள் வலுப்படும்'
'அன்பு, புரிதல், பகிர்வால் குடும்ப உறவுகள் வலுப்படும்'
'அன்பு, புரிதல், பகிர்வால் குடும்ப உறவுகள் வலுப்படும்'
ADDED : செப் 30, 2025 12:36 AM

சூலுார்; 'அன்பு, புரிதல், பகிர்வு, ஒற்றுமை ஆகியவைதான் குடும்ப உறவுகளை வலுப்படுத்துகின்றன,'' என, வாழ்வியல் பயிற்சியாளர் சசிக்குமார் பேசினார்.
முத்துக்கவுண்டன் புதுார் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், மாதாந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு விவேகானந்தர் அரங்கத்தில் நடந்தது. இயக்க தலைவர் சம்பத்குமார் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில், 'கொடுப்பதில் இன்பம் குடும்பம்' என்ற தலைப்பில், ஞான சஞ்சீவன குருகுல நிறுவனர், வாழ்வியல் பயிற்சியாளர் சசிக்குமார் பேசியதாவது:
குடும்பம் என்பது ஒவ்வொருவரின் வாழ்வின் அடித்தளம் மட்டுமல்ல. சமுதாயத்தின் ஆணிவேரும் ஆகும். கொடுப்பதில் இன்பம் காண்பது குடும்பமாகும். மனைவிக்கு நல்ல கணவனாக இருந்து அன்பை கொடுக்க வேண்டும். கணவனுக்கு பொறுப்பான உணர்வுகளை மனைவி கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வாழ்க்கையில் அன்பையும், பண்பையும் பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும். ஒவ்வொரு உறவுகளும், தன்னுடன் இருக்கும் மற்ற உறவுகளுக்கு உண்மையான உணர்வுகளை கொடுப்பதில் தான் இன்பம் இருக்கிறது.
அன்பு, புரிதல், பகிர்வு, ஒற்றுமை ஆகியவை குடும்ப உறவுகளை வலுப்படுத்துகின்றன. பெற்றோர் தங்கள் பங்கை ஆழ்ந்த அன்போடு நிறைவேற்றினால், குழந்தைகள் நல்ல மன நலனுடன் வளரும். இதை பின்பற்றினால் குடும்ப உறவின் மேம்பாட்டுக்கும், கொடுக்கும் மனப்பான்மையையும் வளர்க்கும் வழிகாட்டியாகவும் அமையும். குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும், அன்பையும் கற்று தருவதால் நல்ல வளர்ச்சி ஏற்படும். கட்டுப்பாட்டை போதிக்க வேண்டும். சிறு வேலைகள் கொடுத்து ஊக்கம் அளித்து பாராட்டினால் அவர்களுக்கு உத்வேகம் ஏற்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.