sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கட்டணம் குறைப்பு: ரயில் பயணியர் மகிழ்ச்சி 

/

கட்டணம் குறைப்பு: ரயில் பயணியர் மகிழ்ச்சி 

கட்டணம் குறைப்பு: ரயில் பயணியர் மகிழ்ச்சி 

கட்டணம் குறைப்பு: ரயில் பயணியர் மகிழ்ச்சி 


ADDED : மார் 02, 2024 11:20 PM

Google News

ADDED : மார் 02, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - கோவை முன்பதிவில்லா ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், ரயில் பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில், காலை, 7:25க்கு பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும், மதுரையில் இருந்து வரும் ரயில் காலை, 10:23மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து கிளம்புகிறது. அதே போன்று, பொள்ளாச்சியில் இரவு, 8:55 மணிக்கு கோவைக்கு ரயில் இயக்கப்படுகிறது.

கோவையில் இருந்து, காலை, 5:25 மணிக்கும், மதியம், 1:30 மணிக்கும், மாலை, 6:40 மணிக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த, மூன்று ஆண்டுகளாக, பொள்ளாச்சி - கோவைக்கு ரயில் கட்டணமாக, 30 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது, முன்பதிவில்லா ரயில்களில் கட்டணம் குறைக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, பொள்ளாச்சி - கோவைக்கு ரயிலில் செல்ல தற்போது, 15 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'பொள்ளாச்சி - கோவை முன்பதிவில்லா ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 15 ரூபாயில் பொதுமக்கள் சென்று வர முடியும். கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

இதே போன்று, கிணத்துக்கடவு - கோவை இடையேயும், 30 ரூபாய் கட்டணம் இருந்தது. தற்போது, 10 ரூபாயாக கட்டணம் குறைக்கப்பட்டது.

இதுகுறித்து, ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us