/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண்ணை கழிவு மேலாண்மை தொழில் நுட்ப பயிற்சி: 'அட்மா' திட்ட விவசாயிகள் பங்கேற்பு
/
பண்ணை கழிவு மேலாண்மை தொழில் நுட்ப பயிற்சி: 'அட்மா' திட்ட விவசாயிகள் பங்கேற்பு
பண்ணை கழிவு மேலாண்மை தொழில் நுட்ப பயிற்சி: 'அட்மா' திட்ட விவசாயிகள் பங்கேற்பு
பண்ணை கழிவு மேலாண்மை தொழில் நுட்ப பயிற்சி: 'அட்மா' திட்ட விவசாயிகள் பங்கேற்பு
ADDED : மார் 12, 2024 09:54 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, பண்ணை கழிவு மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டியில் வேளாண்மைத்துறையின் சார்பாக, 'அட்மா' திட்டத்தின் கீழ், உள் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிர்களின் பண்ணை கழிவு மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் நாகநந்தினி வரவேற்றார்.
தெற்கு வேளாண்மை உதவி இயக்குனர் நாகபசுபதி தலைமை வகித்து பேசுகையில், ''பண்ணை கழிவுகளை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். அவற்றை கொண்டு விவசாயத்துக்கு மிகுந்த பயன்படுத்தக்கூடிய தொழு உரமாகவும், மண்புழு உரமாகவும் மாற்றி பயன்படுத்த வேண்டும். பண்ணை கழிவுகளை வேகமாக மட்கச் செய்ய நுண்ணுயிர்களின் கலவை பயன்படுத்த வேண்டும். தென்னந்தோப்புகளில் பண்ணைக்கழிவுகளை தீ வைத்து எரிப்பதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
இதை தொடர்ந்து, ஓய்வு பெற்ற வேளாண்மை உதவி இயக்குனர் மகாலிங்கம் பேசுகையில், ''பொள்ளாச்சி பகுதியில் தென்னை சாகுபடி அதிகளவு இருப்பதால், தென்னை நார் கழிவு மற்றும் பயிர் கழிவு அதிகளவு கிடைக்கும். இவற்றை வீணக்காமல் 'பிலிரோடஸ்' என்ற பூஞ்சானத்தை பயன்படுத்தி வேகமாக பண்ணை கழிவை மட்குவதற்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம்,'' என்றார்.
பண்ணைக்கழிவுகளை நெருப்பு வைத்து எரிப்பதால் பல பாதிப்புகள் ஏற்படும் என விளக்கப்பட்டது. மேலும், அவ்வாறு செய்யாமல் அக்கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
தொடர்ந்து, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் உதவி வேளாண் அலுவலர் குமார், திட்ட செயல்பாடுகள் குறித்து பேசினார். வேளாண் துறையில் உள்ள திட்டங்கள் குறித்து, உதவி வேளாண்மை அலுவலர் ஜாபர்அலி விளக்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் மற்றும் 'அட்மா' தொழில்நுட்ப மேலாளர்கள் நாகநந்தினி, ராதா ஆகியோர் செய்து இருந்தனர்.

