/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண்ணாரி அம்மன் கல்லுாரியில் உழவர் மேம்பாட்டு திட்டம்
/
பண்ணாரி அம்மன் கல்லுாரியில் உழவர் மேம்பாட்டு திட்டம்
பண்ணாரி அம்மன் கல்லுாரியில் உழவர் மேம்பாட்டு திட்டம்
பண்ணாரி அம்மன் கல்லுாரியில் உழவர் மேம்பாட்டு திட்டம்
ADDED : மார் 19, 2024 12:23 AM

கோவை;சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லுாரியில், உழவர் மேம்பாட்டுத் திட்டம் துவங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு அதிநவீன வேளாண் நடைமுறைகள், நுட்பங்களை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பொள்ளாச்சி ஜாதிக்காய் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்டை சேர்ந்த, 24 விவசாயிகள் பங்கேற்றனர்.
தொழில்நுட்ப பயன்பாடு, தென்னைக்கான சிறந்த பண்ணை மேலாண்மை நடைமுறைகள், ஊடுபயிர் போன்றவற்றின் அடிப்படையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது.
ட்ரோன் பயன்பாடு, நோய்த் தடுப்பு, மழைநீர் சேகரிப்பு திட்டம், தாவர திசு வளர்ப்பு, நிலையான வேளாண்மைக்கு ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு, உயிர் உர பயன்பாடு, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட, பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடந்தன.
வேளாண் பொறியியல், உயிரிதொழில்நுட்பம், குடிமைப் பொறியியல், மெக்கட்ரானிக்ஸ் மற்றும் செயற்கைப் பொறியியல் துறைகளைச் சேர்ந்த, திறமையான பேராசிரியர்கள் விவசாயிகளுக்கு விளக்கினர்.

