காட்டுப்பன்றி தாக்கி காயம் இழப்பீடு கேட்கும் விவசாய சங்கம்
காட்டுப்பன்றி தாக்கி காயம் இழப்பீடு கேட்கும் விவசாய சங்கம்
ADDED : ஆக 12, 2026 08:21 PM
பெ.நா.பாளையம்: தடாகம் வரப்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார்,60. சில தினங்களுக்கு முன்பு தோட்டத்திற்கு வரும் வழியில் காட்டுப் பன்றிகள் தாக்கியதால், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இவருக்கு உரிய இழப்பீடு வழங்க கோவை வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, இச்சங்கத்தின் மாநில அமைப்பாளர் பிரபு கூறுகையில், பாதிக்கப்பட்ட விவசாயி நந்தகுமார், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது, 3 லட்ச ரூபாய் செலவாகும் என கூறியதால், வீட்டில் எண்ணெய் கட்டு வைத்தியம் செய்து வருகிறார். தாமத தகவல் என்பதை கருத்தில் கொள்ளாமல், இது குறித்து வனத்துறையினர் உரிய விசாரணை நடத்தி, விவசாயி நந்தகுமாருக்கு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
