/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைந்த விலைக்கு இளநீ்ர் விற்காதீர்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
/
குறைந்த விலைக்கு இளநீ்ர் விற்காதீர்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
குறைந்த விலைக்கு இளநீ்ர் விற்காதீர்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
குறைந்த விலைக்கு இளநீ்ர் விற்காதீர்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : அக் 26, 2025 08:47 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலையை ஒப்பிடுகையில், ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், ஒரு ரூபாய் குறைக்கப்பட்டு, 31 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 13,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, வட மாநிலங்களில் மழைப்பொழிவு குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொள்ளாச்சி பகுதிகளில் இளநீர் அறுவடை வேகமாக நடைபெற்று வருகிறது.
ஆனால், வியாபாரிகள் பலர், விவசாயிகளிடம் பல்வேறு காரணங்களைச் சுட்டிக் காட்டி, குறைந்த விலைக்கு இளநீர் வாங்கிச்செல்ல முற்படுகின்றனர்.
இந்த வாரம் தேங்காய் விலை, கிலோ, 74 ரூபாய் வரையும், ஒரு டன் தேங்காய் விலை, 74 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் விலையை ஒப்பிடுகையில், இளநீர் விலை குறைந்தே காணப்படுகிறது.
எனவே, மிகக் குறைந்த விலைக்கு இளநீர் விற்கும் விவசாயிகள், அறுவடையை ஓரிரு மாதங்கள் நிறுத்தி வைக்கலாம். அதற்கு பின்னர், இளநீர் அறுவடை செய்யலாம்.
ஈரியோபைட் சிலந்திப்பூச்சி தாக்குதலுக்கு, உரிய பயிர் பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு, இளநீரின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

