/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பாரம்பரிய பயிர்களை அதிகம் பயிரிடுங்கள்'; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
/
'பாரம்பரிய பயிர்களை அதிகம் பயிரிடுங்கள்'; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
'பாரம்பரிய பயிர்களை அதிகம் பயிரிடுங்கள்'; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
'பாரம்பரிய பயிர்களை அதிகம் பயிரிடுங்கள்'; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : செப் 17, 2025 09:53 PM
மேட்டுப்பாளையம்; விவசாயிகள் பாரம்பரிய காய்கறிகள், பழங்கள், பயிர்கள் போன்றவைகளை அதிகம் பயிரிட வேண்டும் என தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சித்தார்தன் கூறியதாவது:-
விவசாயத்தில் அதிக அளவு பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்துவது மண் வளத்தை குறைப்பது மட்டுமில்லாமல், விளை பொருட்களின் தரத்தையும் பாதிக்கிறது.
எனவே விவசாயிகள் குறைந்த அளவு பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இன்றைய சூழலில் விவசாயிகள் பாரம்பரிய காய்கறிகள், பழங்கள், பயிர்கள் போன்றவைகளை அதிகம் பயிரிட வேண்டும்.
இவை இயற்கை சூழலுக்கு தகுந்தவையாகவும், குறைந்தளவு ரசாயனங்கள் போதுமானவையாகவும் உள்ளன. அதிக செலவில்லாமல் நல்ல உற்பத்தி பெறுவதற்கு உயிரி உரங்களைப் பயன்படுத்த வேண்டும். இவை வேர்ப்பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தும். மேலும், மண் வளத்தையும் மேம்படுத்த செய்கின்றன. பசுமை உரம், நாட்டு பஞ்சகாவ்யம், ஜீவாமிர்தம், கோமியம், கழிவு உரம் போன்றவை பயன்படுத்தப்பட்டால் பயிர்கள் ஆரோக்கியமாக வளரும். ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள் மிக குறைவாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இது சுற்றுசூழலுக்கும் மனித உடல் நலனுக்கும் பெரிதும் உதவியாகும்.
அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் மூலம் உயிரி உரங்கள், இயற்கை விவசாயம் பாரம்பரிய விதைகள் குறித்து விழிப்புணர்வு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள் இத்திட்டங்களில் பங்கேற்று பயன் பெறவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.