/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பார்த்தீனியம் செடி அழிக்க விவசாயிகள் வேண்டுகோள்
/
பார்த்தீனியம் செடி அழிக்க விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : டிச 08, 2025 05:37 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் அதிக அளவு வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளை அழிக்க, வேளாண்துறை உதவ வேண்டும் என, முன்னோடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்தும், விட்டுவிட்டும் பெய்து வருகிறது. இதனால் உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இச்செடிகளை முழுவதுமாக அப்புறப்படுத்த, வேளாண் துறை வாயிலாக ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நடவடிக்கை இல்லாததால், தற்போது ஏராளமாக வளர்ந்து வருகின்றன.
விவசாயிகள் கூறுகையில், ' பார்த்தீனியம் பூக்கள் வாயிலாக சுவாச கோளாறு மற்றும் இலைகள் வாயிலாக, தோல் அலர்ஜி ஏற்படுகிறது. வேளாண் நிலங்களில் அதிக அளவு வளர்வதால் பயிர்கள் உற்பத்தி பாதிக்கிறது.
வேளாண்துறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பார்த்தீனியம் செடிகளை அழிக்க பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தியது. அதேபோல நடப்பு ஆண்டும் அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என்றனர்.

