/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காஸ் குழாய் பதிக்கும் திட்டத்தில் சதுரடிக்கு ரூ.900 வீதம் இழப்பீடு கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு
/
காஸ் குழாய் பதிக்கும் திட்டத்தில் சதுரடிக்கு ரூ.900 வீதம் இழப்பீடு கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு
காஸ் குழாய் பதிக்கும் திட்டத்தில் சதுரடிக்கு ரூ.900 வீதம் இழப்பீடு கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு
காஸ் குழாய் பதிக்கும் திட்டத்தில் சதுரடிக்கு ரூ.900 வீதம் இழப்பீடு கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு
ADDED : பிப் 20, 2024 11:40 PM
கோவை;இருகூரில் விவசாய நிலத்தில் காஸ் குழாய் பதிக்கும் திட்டத்தில், சதுரடிக்கு ரூ.900 வீதம் இழப்பீடு வழங்க வேண்டுமென, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூலுார் அருகே இருகூர் சுற்றுவட்டார பகுதிகளில் காஸ் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், இருகூர் - தேவனகுந்தி காஸ் குழாய் பதிக்கும் திட்டத்தில், நில உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பது தொடர்பான கூட்டம், இருகூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது.
அப்போது, நிலத்துக்கான அரசின் வழிகாட்டு மதிப்பில், 20 சதவீத தொகையை இழப்பீடாக கொடுக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டது. இது, விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையடுத்து, காஸ் குழாய் விரிவாக்கத் திட்டத்தால் பாதிப்படையும் விவசாயிகள் ஒன்றிணைந்து, கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்திருந்தனர்.
கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து, விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த இழப்பீடு வழங்கியது போல், காஸ் குழாய் பதிக்க எடுக்கப்படும் நிலத்துக்கும் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக, விவசாயிகள் கூறியதாவது:
விவசாய விளைநிலத்துக்குள் காஸ் குழாய் பதிக்கப்பட்டு விட்டால், முழு நிலமும் பயனற்றதாகி விடும். கட்டடம் கட்டுவதற்கும், மர விவசாயம் செய்வதற்கும், இதர உபயோகத்துக்கும் பயனற்றதாகி விடும். அரசு வழிக்காட்டி மதிப்பில், 20 சதவீதம் என்பது எங்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
இதே கிராமத்தில், விமான நிலைய விரிவாக்கத்துக்காக, நிலம் கையகப்படுத்தியபோது, சதுரடிக்கு, 900 ரூபாய் கலெக்டர் நிர்ணயித்து உத்தரவிட்டார்.
கலெக்டர் மதிப்பு நிர்ணயம் செய்த பூமியும், எங்களது பூமியும் இருகூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது. இவை தொழிற்சாலை பயன்பாட்டுக்கானது.
எனவே, சதுரடிக்கு, 900 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

