/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு யானைக்கு இடமாற்றம்; விவசாயிகள் சங்கம் கோரிக்கை
/
காட்டு யானைக்கு இடமாற்றம்; விவசாயிகள் சங்கம் கோரிக்கை
காட்டு யானைக்கு இடமாற்றம்; விவசாயிகள் சங்கம் கோரிக்கை
காட்டு யானைக்கு இடமாற்றம்; விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ADDED : மார் 18, 2025 11:45 PM
கோவை; பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும், ஒற்றைக் காட்டு யானையை இடமாற்றம் செய்ய வேண்டும் என, சாதி, மதம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சங்க தலைவர் கந்தசாமி கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் வன விலங்குகளால் விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக காட்டு யானை, மான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வந்து, பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் தீங்கு விளைவிக்கின்றன.
வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டம், அமலில் உள்ள காரணத்தினால் இந்த விலங்குகளை விரட்ட வனத்துறையினர் மறுக்கின்றனர். எனவே வனத்தை விட்டு வெளியே வந்து தீங்கு விளைவிக்கின்ற விலங்குகளுக்கு, வன உயிரின பாதுகாப்புச் சட்டம் பொருந்தாது என, மத்திய மாநில அரசுகள் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
இந்நிலையில், ஒற்றை காட்டுயானை தாக்கி நடராஜன் என்ற ஒருவர் இறந்துள்ளார். எனவே உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அந்த ஒற்றை காட்டு யானையை, இடமாற்றம் செய்ய வேண்டும்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை வனத்துறையினர் நவடிக்கை எடுக்கவில்லை. எனவே வனத்துறையினர் ஒற்றைக் காட்டு யானையை, இடமாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.