/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 28, 2025 10:09 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், நாராயணசாமிநாயுடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாராயணசாமிநாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில கொள்கை பரப்பு செயலாளர் முருகானந்த கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி செயலாளர் கருணாம்பிகை முன்னிலை வகித்தார்.
மத்திய அரசு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும். எம்.எஸ்., சாமிநாதன் குழு பரிந்துரையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாபில் விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள் போராடினர்.
கைது செய்யப்பட்ட அவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.