/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
/
விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 01, 2025 10:44 PM

பொள்ளாச்சி; 'எம்புரான்' படத்தை தடை செய்ய வலியுறுத்தி, பொள்ளாச்சியில் விவசாயிகள் சங்கங்களின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு தனியார் நிதி நிறுவன அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க தலைவர் பாபு தலைமை வகித்தார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் முருகானந்த கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்து பேரழிவு ஏற்படும் என, அணையை உடைக்கும் திட்டத்தோடு அவதுறாக சித்தரித்து தயாரிக்கப்பட்டுள்ள 'எம்புரான்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். தமிழக - கேரளா இடையே கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு திரைப்படம் தயாரித்த, நிதி நிறுவனத்தை மூட வேண்டும் என, வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.

