/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகள் ரயில் மறியல் முயற்சி
/
விவசாயிகள் ரயில் மறியல் முயற்சி
ADDED : டிச 17, 2024 06:09 AM
கோவை; ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள், 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் பகுதியில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி செய்து, விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து, ரயில் மறியலில் ஈடுபட ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைய முயன்ற விவசாயிகள், 28 பேரை போலீசார் கைது செய்தனர்.