/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபராதத்தில் இருந்து விலக்கு பெற விவசாயிகள் ஆதாரத்துடன் முறையிடலாம்
/
அபராதத்தில் இருந்து விலக்கு பெற விவசாயிகள் ஆதாரத்துடன் முறையிடலாம்
அபராதத்தில் இருந்து விலக்கு பெற விவசாயிகள் ஆதாரத்துடன் முறையிடலாம்
அபராதத்தில் இருந்து விலக்கு பெற விவசாயிகள் ஆதாரத்துடன் முறையிடலாம்
ADDED : ஜூலை 06, 2025 11:50 PM
கோவை; ''தங்களது தரப்பு நியாயத்தை, ஆதாரப்பூர்வமாகவும் சட்டப்பூர்வமாகவும் விவசாயிகள் நிரூபிக்கும் பட்சத்தில், அபராதத்தில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளது,'' என, கோவை தெற்கு கோட்டாட்சியர் ராம்குமார் கூறினார்.
கோவையில் உள்ள மேற் குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய ஆலாந்துறை, தென்கரை, தெனமநல்லுார், தேவராயபுரம், வெள்ளிமலை பட்டிணம், நரசீபுரம், இக்கரை போளுவாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், சட்டத்துக்கு புறம்பாக சிலர், கனிமங்களை வெட்டிக் கடத்தியுள்ளனர்.
நீதிமன்ற விசாரணைக்கு பின், மாவட்ட நிர்வாகமும், கனிம வளத்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கனிம வள கொள்ளை நடந்த இடங்களை, வருவாய்த்துறையினர் 'ட்ரோன்' வாயிலாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களுக்கு அபராதம் விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
விவசாயிகள் கூறுகையில், 'லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; இவ்வளவு தொகையை எங்களால் செலுத்த முடியாது,  கனிம வளம் வெட்டி எடுக்கப்பட்டபோது, போலீசில் நாங்கள் கொடுத்த புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அரசியல் கட்சியினர் எங்களை மிரட்டி, கனிமவளங்களை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அப்பாவி விவசாயிகள் மீது அபராதம் விதிப்பதில் அவசரம் காட்டுகின்றனர். உண்மையான கனிமவளக்கொள்ளையர்களை அடையாளம் காட்டினாலும் அவர்களை கைது செய்ய, அதிகாரிகள் மறுக்கின்றனர். நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும். எங்களுக்கு விதித்த அபராதத்தை, திரும்ப பெற வேண்டும்' என்றனர்.

