/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் உழவர் தின விழா நிறைவு
/
வேளாண் பல்கலையில் உழவர் தின விழா நிறைவு
ADDED : செப் 30, 2024 11:48 PM

கோவை : கோவை, வேளாண் பல்கலை வளாகத்தில், நடைபெற்று வந்த உழவர் தின விழா கண்காட்சி நிறைவடைந்தது.
நான்கு நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். நிறைவு விழாவில், பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, 'டி.என்.ஏ.யூ., அக்ரிகார்ட்' இடுபொருள் விற்பனை தளத்தைத் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் சிறந்த அரங்குகள் அமைத்தவர்களுக்கு விருது வழங்கி, நிதியுதவி அளித்தவர்களை கவுரவித்தார். நிகழ்ச்சியில், பல்கலை விரிவாக்கக் கல்வி இயக்குனர் முருகன், ஆராய்ச்சி இயக்குனர் ரவீந்தரன், பதிவாளர் தமிழ் வேந்தன், பயிற்சிப் பிரிவு தலைவர் ஆனந்தராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.