/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய்களை விளை நிலத்தில் பதிக்க வேண்டாம்: துணை முதல்வரிடம் மனு அளிக்க விவசாயிகள் முடிவு

ADDED : டிச 18, 2024 08:44 PM

சூலுார்; சாலை ஓரத்தில் எண்ணெய் குழாய்கள் பதிக்க வேண்டும், என, துணை முதல்வரை சந்தித்து வலியுறுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
கோவை இருகூரில் இருந்து பெங்களூரு தேவனஹந்தி வரை, 340 கி.மீ., தூரத்துக்கு எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் செயல்படுத்த உள்ளது. திருப்பூர் மாவட்டம் முத்தூரில் இருந்து, தேவனஹந்தி வரை, நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கப்பட உள்ளது. ஆனால், இருகூரில் இருந்து முத்தூர் வரை, 70 கி.மீ., தூரத்துக்கு விளைநிலங்கள் வழியே கொண்டு செல்லும் பணி நடந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை, திருப்பூர் மாவட்டத்தில், திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விவசாயிகள் தரப்பில் கோர்ட்டில் முறையிட்டு, திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடையாணை பெற்றுள்ளனர். தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் நாகராஜ் தலைமையில் போராட்டக்குழு பிரதிநிதிகள், டெல்லி சென்று பெட்ரோலிய துறை அமைச்சர், செயலர் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்தனர்.
போராட்டக்குழு நிர்வாகி ராவத்தூர் கணேசன் கூறுகையில், நெடுஞ்சாலை ஓரமாக திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை விடுத்து, 20 நாட்களுக்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். விளைநிலங்கள் வழியாக திட்டத்தை செயல்படுத்தக்கூடாது எனக்கோரி, கோர்ட்டில் தடையுத்தரவு பெற்றுள்ளோம். நாளை ( இன்று) திருப்பூருக்கு வரும், துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம், என்றார்.