/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
/
காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
ADDED : டிச 28, 2024 12:16 AM
சூலுார்; மக்காச்சோள பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும், என, போகம்பட்டி, இடையர் பாளையம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட போகம்பட்டி, இடையர் பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. மேலும், பீட்ரூட், கீரை வகைகள் அதிகம் சாகுபடியாகிறது.
இந்நிலையில், இக்கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
இதுகுறித்து போகம் பட்டி விவசாயிகள் கூறியதாவது:
சுற்றுவட்டார பகுதிகளில், பீட்ரூட், மக்காச்சோளம், கீரைகள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக கூட்டமாக வரும் காட்டு பன்றிகள், மக்காச்சோள கதிர்களை உண்டு நாசம் செய்கின்றன. விளை நிலத்தில் உலா வருவதால், பீட்ரூட் மற்றும் கீரை செடிகளும் நாசமாகி விடுகின்றன. அவற்றை விரட்டினாலும் திரும்பவும் மறுநாள் வந்து விடுகின்றன.
இதனால், பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சேதம் ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை உடனடியாக பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

