/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலர்களமாகும் கிராம பாலங்கள் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
/
உலர்களமாகும் கிராம பாலங்கள் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
உலர்களமாகும் கிராம பாலங்கள் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
உலர்களமாகும் கிராம பாலங்கள் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
ADDED : பிப் 17, 2026 05:28 AM

குடிமங்கலம்: போதிய உலர்களங்கள் இல்லாததால், பாலத்தில் மக்காச்சோளத்தை காய வைக்கும் நிலைக்கு பொட்டையம்பாளையம் சுற்றுப்பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
குடிமங்கலம் அருகே பொட்டையம்பாளையம், தொட்டம்பட்டி சுற்றுப்பகுதிகளில், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கும், மானாவாரியாகவும், மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை துவங்கியுள்ளது.
அறுவடை செய்த மக்காச்சோளம், குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும். எனவே, உலர்களங்களில் மக்காச்சோளத்தை சில நாட்கள் காய வைக்க வேண்டும்.
ஆனால் அப்பகுதியில் போதிய உலர்கள வசதியில்லை. இதனால், புக்குளம் மற்றும் தொட்டம்பட்டி செல்லும் ரோட்டிலுள்ள பாலங்களின் மீது மக்காச்சோளத்தை கொட்டி காய வைக்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், ' அனைத்து வேளாண் விளைபொருட்களையும் சந்தைப்படுத்த உலர்களங்கள் தேவையாக உள்ளது. ஒவ்வொரு கிராமத்தின் சாகுபடி பரப்புக்கு ஏற்ப, உலர்களங்கள் அமைத்துதர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

