/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புளியங்காய் அறுவடை சீசன் துவக்கம்
/
புளியங்காய் அறுவடை சீசன் துவக்கம்
ADDED : பிப் 17, 2026 05:28 AM
-- நமது நிருபர் -: திருப்பூர் மாவட்டம் காங்கயம் சந்தைக்கு, மவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து புளியங்காய்களை வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.
மாசி, பங்குனி மாதங்கள் புளியங்காய் சீசன் காலம் ஆகும். புளியங்காய் சீசன் துவங்கி உள்ளது. புளியங்காய்களை அறுவடை செய்து அவற்றை சுத்தப்படுத்தி விற்பனை செய்வதற்கு ஏராளமான சிறு வியாபாரிகள் உள்ளனர்.
அவர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே பொது இடங்களில் உள்ள புளிய மரங்களை குத்தகைக்கு பிடித்து உள்ளனர். சொந்த மரம் வைத்துள்ள விவசாயிகள் தங்கள் தேவை போக மீதம் உள்ளவற்றை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
புளி விற்பனைக்காக காங்கயம் சந்தை தனித்துவமாக திகழ்கிறது. அங்கு வாரம் தோறும் திங்கள்கிழமை காலை நேரத்தில் புளி விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது.
பல்வேறு பகுதிகளில் இருந்து காங்கயம் சந்தைக்கு வியாபாரிகள் புளியை மூட்டை கட்டி கொண்டு வருகின்றனர். வியாபாரிகளும், பொதுமக்களும் தங்கள் ஆண்டு தேவைக்கான புளியை கொள்முதல் செய்து வருகின்றனர்.
தற்பொழுது ஒரு கிலோ புளி சராசரியாக, 180 ரூபாய்க்கு விலை போகிறது. இனி வரும் வாரங்களில் புளி வரத்து அதிகரித்தால் விலை மேலும் சரியக் கூடும்.

