/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குட்டைகளை துார்வார விவசாயிகள் கோரிக்கை
/
குட்டைகளை துார்வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஆக 14, 2025 10:07 PM

தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் வட்டாரத்தில் உள்ள குட்டைகள் புதர்மண்டி இருப்பதால், விரைந்து தூர்வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டாமுத்துார் வட்டாரத்தில், 60 சதவீதம் பேர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட குட்டைகள் உள்ளன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில், மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வரும் ஓடைகளில் இருந்து நீர் வருகிறது. சில ஆண்டுகளாக, இந்த குட்டைக்கு நீர் வரும் பாதைகளை முறையாக பராமரிக்காததால், நீர் வழித்தடங்கள் பல இடங்களிலும் மறைந்துள்ளது. குட்டைகள் முழுவதும் சீமை கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் காணப்படுகின்றன. இதனால், மழைக்காலங்களில், ஓடைகளில் வரும் நீர், குட்டைகளில் சேமிக்க முடியாமல் வீணாகிறது. மழைநீரை முறையாக சேமித்தால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, பாசனத்துக்கு தங்கு தடையின்றி நீர் கிடைக்கும். புதர்மண்டியுள்ள குட்டைகளை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரியுள்ளனர்.