sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கொப்பரை ஆதார விலை உயர்வால் பலனில்லை ஏமாற்றம் என விவசாயிகள் ஆதங்கம்

/

 கொப்பரை ஆதார விலை உயர்வால் பலனில்லை ஏமாற்றம் என விவசாயிகள் ஆதங்கம்

 கொப்பரை ஆதார விலை உயர்வால் பலனில்லை ஏமாற்றம் என விவசாயிகள் ஆதங்கம்

 கொப்பரை ஆதார விலை உயர்வால் பலனில்லை ஏமாற்றம் என விவசாயிகள் ஆதங்கம்


ADDED : டிச 14, 2025 02:42 AM

Google News

ADDED : டிச 14, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: கொப்பரை ஆதார விலை கிலோவுக்கு, 4 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளதால், இந்தாண்டும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, காங்கேயம், திண்டுக்கல் உள்ளிட்ட, 20 மாவட்டத்தில், தென்னை சாகுபடி பரப்பு அதிகம் உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு பின், கொப்பரை, தேங்காய் விலை உயர்ந்த நிலையில், வட மாநிலத்தில் பனிப்பொழிவுகாரணமாக, மீண்டும் விலை சரிந்து வருகிறது.

தற்போது வெளி மார்க்கெட்டில் கொப்பரை கிலோவுக்கு, 190 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு, சாதாரண கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குவின்டாலுக்கு, 445 ரூபாய் உயர்த்தி, 12,027 ரூபாயாகவும், முழு கொப்பரைக்கான விலை, 400 ரூபாய் உயர்த்தி, 12,500 ரூபாயாகவும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. கடந்தாண்டை விட சாதாரண கொப்பரை கிலோவுக்கு, 4.45 ரூபாய் உயர்ந்துள்ளது.

தென்னை உற்பத்தியாளர் மாநில சங்க பிரதிநிதி தங்கவேலு கூறுகையில், ''கொப்பரை ஆதார விலை, கிலோ, 160 ரூபாயாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மத்திய அரசு வழக்கம் போல, 4 ரூபாய் உயர்த்தி, 120.27 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இது விவசாயிகளுக்கு எவ்வித பலனும் அளிக்காது,'' என்றார்.

தோள் கொடுக்கும் மோடி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 'மில்லிங்' கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குவின்டாலுக்கு, 445 ரூபாயும், பால் கொப்பரைக்கான ஆதார விலையை, 400 ரூபாயும் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வெள்ளை ஈக்கள் தாக்குதலாலும், வாடல் நோயாலும் பரிதவித்து வரும் தென்னை விவசாயிகளின் துயர் துடைத்து, அவர்களின் வாழ்வுக்கு வழிவகுக்கும் வகையில், கொப்பரை ஆதார விலையை உயர்த்திய பிரதமருக்கு தமிழக விவசாயிகள் சார்பில் நன்றி. - நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்.








      Dinamalar
      Follow us