/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவைப்படும் நேரத்தில் உரம் கிடைக்கலை; விவசாயிகள் விரக்தி
/
தேவைப்படும் நேரத்தில் உரம் கிடைக்கலை; விவசாயிகள் விரக்தி
தேவைப்படும் நேரத்தில் உரம் கிடைக்கலை; விவசாயிகள் விரக்தி
தேவைப்படும் நேரத்தில் உரம் கிடைக்கலை; விவசாயிகள் விரக்தி
ADDED : அக் 26, 2025 02:52 AM
சூலூர்: ''தேவையான போது உரங்கள் கிடைப்பதில்லை,'' என, புற நகர் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
பருவ மழை துவங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளான, சூலூர், சுல்தான்பேட்டை, அன்னூர், மேட்டுப்பாளையம், பெரிய நாயக்கன்பாளையம், காரமடை சுற்று வட்டார பகுதிகளில், பரவலாக மழை பெய்தது. இதையடுத்து, விவசாயிகள் விதைப்பு பணிகளை துவக்கி உள்ளனர். மழைக்கு முன்னர் விதைப்பு பணியை முடித்த விவசாயிகள், பயிர்களுக்கு தேவையான உரங்களை இட முடிவு செய்தனர்.
யூரியா உள்ளிட்ட உரங்களை வாங்க, கூட்டுறவு சங்கம் மற்றும் உரக்கடைகளை நாடுகின்றனர். 'ஸ்டாக் இல்லை' என, ஒற்றை வார்த்தையில் பதில் கிடைக்கிறது. இதனால், உரங்களை தேடி, பல இடங்களுக்கு சுற்றி அலைகின்றனர் விவசாயிகள்.
சுல்தான்பேட்டை பகுதி விவசாயிகள் கூறுகையில், 'கடந்த ஒரு வாரத்துக்கு முன் நல்ல மழை பெய்தது. பயிர்களுக்கு உரமிட்டால் நன்றாக இருக்கும், என, நினைத்து யூரியா உரம் வாங்க சென்றால் சுற்று வட்டாரத்தில் எங்கும் கிடைக்கவில்லை. வெளியூரில் உள்ள நண்பர்களிடம் விசாரித்தால், இதே நிலைதான் உள்ளது. பயிர்களுக்கு தேவையான போது, உரமிட்டால் தான் பலன் கிடைக்கும். ஆனால், எங்கு கிடைக்கவில்லை' என விரக்தியுடன் கூறினர்.

