ADDED : நவ 29, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மாதந்தோறும், குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, அதன் வாயிலாக பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. அதன்படி, நவ., மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், வரும் டிச., 4ம் தேதி நடத்தப்படுகிறது.
சப்-கலெக்டர் அலுவலகத்தில், அன்றைய தினம் காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்து, விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெறுகிறார். எனவே, விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் சார்ந்த தங்களது குறைகளை தெரிவித்து பயனடையலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.