/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி. கால்வாய் துார்வார 10 கோடி நிதி ஒதுக்கீடு; முதல்வர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
பி.ஏ.பி. கால்வாய் துார்வார 10 கோடி நிதி ஒதுக்கீடு; முதல்வர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
பி.ஏ.பி. கால்வாய் துார்வார 10 கோடி நிதி ஒதுக்கீடு; முதல்வர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
பி.ஏ.பி. கால்வாய் துார்வார 10 கோடி நிதி ஒதுக்கீடு; முதல்வர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 11, 2025 09:01 PM

பொள்ளாச்சி; 'பி.ஏ.பி. கால்வாய்களை துார்வார, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,' என, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலினை, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், திட்டக்குழு உறுப்பினர்கள் சந்தித்து மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
பி.ஏ.பி. திட்டத்தில் பிரதான கால்வாய்கள், கிளை கால்வாய்கள் நீர்வளத்துறை பொறுப்பிலும்;1,000 கி.மீ., துாரம் உள்ள பகிர்மான கால்வாய்கள், உப பகிர்மான கால்வாய்கள் பாசன சங்கங்களின் பொறுப்பிலும் உள்ளது.
கடந்த காலங்களில் குடிமராமத்து நிதி என ஒவ்வொரு பாசன சங்கங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு, அனைத்து கால்வாய்களும் துார்வாரப்பட்டு கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
கடந்த, நான்கு ஆண்டுகளாக நிதி ஒதுக்காததால், பாசன சங்கங்களில் போதிய நிதி வசதி இல்லாததாலும், பாசன சங்கங்களின் பொறுப்பில் உள்ள கால்வாய்களை துார்வார இயலாமல் கடைமடை வரை தண்ணீர் கொண்டு சேர்க்க முடியாத நிலை உள்ளது.
தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் பாசன கால்வாய்களை துார்வாரி கொடுக்க வேண்டும் என, கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை விடுத்து துார்வாரப்படுகிறது.
கால்வாய்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் துார்வார வேண்டும் என, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட விதிகள் இருப்பதாக கூறுவதால், நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே,காவிரி டெல்டா பாசனத்துக்கு துார்வார ஆண்டுதோறும் நிதி ஒதுக்குவது போல பி.ஏ.பி.திட்ட கால்வாய்களையும் துார்வார ஆண்டுதோறும் வேளாண் துறையில் நிதி ஒதுக்க வேண்டும்.
காண்டூர் கால்வாயில் விடுபட்ட பகுதிகள், பி.ஏ.பி. பிரதான கால்வாய் முழுவதும், கிளை மற்றும் பகிர்மான கால்வாய்கள், ஷட்டர்கள் மிகவும் பழுதடைந்துள்ளதால் நீர் விரயமாகிறது. போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
பாசன திட்டத்தில் நிலுவையில் உள்ள ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற முதல்வர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், உடுமலையில் நடந்த நிகழ்ச்சியில், 'பி.ஏ.பி. கால்வாய்கள் துார்வார, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்,' என அறிவித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது:
பி.ஏ.பி. திட்டம் உருவாக்கியவர்களது சிலைகளை அமைத்து மரியாதை செலுத்திய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். முதல்வரை சந்தித்து, மூன்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது. டெல்டா மாவட்டத்துக்கு நிதி ஒதுக்குவது போல, ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் உள்ள கால்வாய்களை துார்வார தலா, ஒரு கோடி என மொத்தம், 10 தொகுதிக்கு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, கால்வாய்களை துார்வார நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

