/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரம் சார்ந்த விவசாயத்தால் பலன் பயிற்சியில் விவசாயிகள் தகவல்
/
மரம் சார்ந்த விவசாயத்தால் பலன் பயிற்சியில் விவசாயிகள் தகவல்
மரம் சார்ந்த விவசாயத்தால் பலன் பயிற்சியில் விவசாயிகள் தகவல்
மரம் சார்ந்த விவசாயத்தால் பலன் பயிற்சியில் விவசாயிகள் தகவல்
ADDED : ஜன 09, 2024 12:25 AM
தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூரில், காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், மரப்பயிர் சாகுபடி குறித்த களப்பயிற்சி வகுப்பு நடந்தது.
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், ' லட்சங்களை கொட்டி தரும் மரப்பயிர் சாகுபடி' என்ற தலைப்பில், தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில், மரப்பயிர் சாகுபடி குறித்த களப்பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
இதில், கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்தூரில் உள்ள சீதாவனம் இயற்கை விவசாய பண்ணையில், களப்பயிற்சி வகுப்பு நடந்தது.
இதில், சீதாவனம் இயற்கை விவசாய பண்ணையின் உரிமையாளர் மாணிக்கராஜ் மற்றும் முன்னோடி மரப்பயிர் விவசாயி வள்ளுவன் ஆகியோர், பல அடுக்கு பல பயிர் சாகுபடி முறையின் நன்மைகள் குறித்தும், விவசாய விளைபொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவது குறித்தும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்தனர்.
இப்பயிற்சி வகுப்பில், முன்னோடி விவசாயி வள்ளுவன் பேசுகையில், மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறிய பின், என்னுடைய தென்னை மரங்களில் காய்ப்பு அதிகரித்துள்ளது. காயின் எடையும் கூடியுள்ளது. மண்ணின் வளமும் அதிகரித்துள்ளது. சூழலியல் மற்றும் பொருளாதார ரீதியாக பல பலன்கள் எனக்கு கிடைத்துள்ளன, என்றார்.
200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.