sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவசாய வாகனங்களுக்கு வரி விதிப்பு ஏன்; விலக்கு அளிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

/

விவசாய வாகனங்களுக்கு வரி விதிப்பு ஏன்; விலக்கு அளிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாய வாகனங்களுக்கு வரி விதிப்பு ஏன்; விலக்கு அளிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாய வாகனங்களுக்கு வரி விதிப்பு ஏன்; விலக்கு அளிக்க விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 14, 2025 11:40 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; விவசாய பயன்பாட்டுக்காக இயக்கப்படும் இலகு ரக மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, சாலை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று, தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்த சாகுபடி பரப்பளவு ஏறத்தாழ 4,37,963 ஏக்கர் (1,77,313 ஹெக்டேர்) ஆகும். மேலும், பல போகமாக பயிர்கள் ஏறத்தாழ 9,173 ஏக்கரில் (3,714 ஹெக்டேரில்) விளைவிக்கப்படுகின்றன. வேளாண் உற்பத்தியில், கோவை சிறந்து விளங்குகிறது.

வேளாண் உற்பத்தியை உயர்த்தவேண்டி, பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதிலும், அது தொடர்பான தொழில்நுட்பங்களை, வேளாண் மக்களிடம் கொண்டு போய் வேளாண் துறை சேர்த்து வருகிறது.

குறிப்பிடத்தக்க முறையில், பயிர் சுழற்சி முறையும், பயிர் பரவலாக்கல் முறையும், புதிய தொழில் நுட்பங்களுடன், தீவிரமான ஒருங்கிணைந்த வேளாண், நீடித்த வறட்சி நில வேளாண்மை, நுண் நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை, பயனற்ற நில மேலாண்மை திட்டம், கூட்டு பண்ணை முறைகள், விரிவான நீர்வடிநிலப்பகுதி வளர்ச்சியுடைய செயல்பாடுகள், பசுமையான இயற்கை உரங்கள், மண் வளம் வளர்ச்சி, ஒருங்கினைந்த பூச்சி மேலாண்மை, கரும்பு விவசாய வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள், இயற்கை உர வேளாண்மை, ஒருங்கினைந்த சத்து மேலாண்மை தொழில் நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றன.

இதன் வாயிலாக கோவையில், நெல், சோளம், கம்பு, ராகி, தினை, சாமை, வரகு முதலிய பயிர்களும், பயிறு வகைகளில் துவரை, உளுந்து, கொள்ளு, மொச்சை, கொண்டை கடலை உள்ளிட்ட வகைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன.

இது தவிர பருத்தி, நிலக்கடலை, புகையிலை, கரும்பு, தேங்காய், வாழை, மஞ்சள் பயிரிடப்படுகின்றன.

பயிர் செய்த விவசாய விளை பொருட்களை விளைநிலத்திலிருந்து அறுவடை செய்து மார்க்கெட்டுகளுக்கும், சந்தைகளுக்கும் நகர்வு செய்வதற்கு இலகு ரகத்தை சேர்ந்த மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வாகனங்களுக்கு, சாலைவரி உள்ளிட்ட, போக்குவரத்துதுறையில் விதிக்கப்படும் பல்வேறு வகைப்பாட்டு கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று, தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சலுகை கிடைக்குமா?

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் ரங்கநாதன் கூறியதாவது:வேளாண் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் எந்த வரிவிதிப்பும் செய்யப்படுவதில்லை. வேளாண் உற்பத்திக்காக வருவாய், கூட்டுறவு, மின்சார வாரியம், குடிநீர், பாசனம், பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை என்று அனைத்து துறையிலும் வரிவிலக்கும் சலுகைகளையும் வழங்குகின்றனர். ஆனால் தமிழகத்தில் விவசாயிகளுக்கு சலுகை வழங்கப்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us