/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரக்கன்று நட கோர்ட் உத்தரவு நடைமுறைப்படுத்துவது யாரு?
/
மரக்கன்று நட கோர்ட் உத்தரவு நடைமுறைப்படுத்துவது யாரு?
மரக்கன்று நட கோர்ட் உத்தரவு நடைமுறைப்படுத்துவது யாரு?
மரக்கன்று நட கோர்ட் உத்தரவு நடைமுறைப்படுத்துவது யாரு?
ADDED : ஜூலை 14, 2025 11:40 PM

கோவை,; கோவை - சிறுவாணி சாலை விரிவாக்கத்தின் போது, வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதியதாக மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என்று, நெடுஞ்சாலைத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை, தவறாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விவசாயிகளும், இயற்கை மற்றும் சூழல் ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை என்.எச்.சாலை வைசியாள் வீதியில் துவங்கி, 32 கி.மீ., தொலைவுக்கு சிறுவாணி வரையிலான சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக செல்வபுரத்திலிருந்து துவங்கி, காளம்பாளையம் வரை விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டது.
தற்போது காளம்பாளையத்திலிருந்து சிறுவாணி வரை, சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளின் போது சாலையின், இரு பக்கங்களிலுமுள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.
வெட்டி அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று, ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.
அதன்படி, நெடுஞ்சாலைத்துறை எந்த மரக்கன்றுகளையும் நட்டு பராமரிக்கவில்லை. ஆனால் மரங்களை மட்டும் வெட்டி கூறும் போடும் வேலையை, சிறப்பாக செய்து வருகிறது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று, அப்பகுதி விவசாயிகள் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.