/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சப்போட்டா சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
/
சப்போட்டா சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜன 08, 2025 10:40 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், பிரதானமாக தென்னை சாகுபடி உள்ளது. மேலும், காய்கறி மற்றும் கால்நடை வளர்த்தல் தொழிலிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், ஆலாம்பாளையம் கிராமத்தில் தென்னை மரங்களுக்கு இடையே, சப்போட்டா மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
அக்., முதல் டிச., மாதங்களில் சப்போட்டா பழ சீசன் துவங்கிய நிலையில், தற்போது, விற்பனைக்காக, பழங்கள் பறிக்கப்பட்டும் வருகின்றன.
விவசாயிகள் கூறியதாவது: தென்னைக்கு பாய்ச்சும் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு சப்போட்டா மரத்திற்கும் பாய்ச்சப்பட்டு, இயற்கை உரமிடப்படுகிறது. இனிப்பு சுவை கொண்ட இப்பழத்தின் மருத்துவ குணம் அறிந்து ஏராளமானோர் வாங்கி சாப்பிடுகின்றனர். தற்போது, கிலோ, 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவ்வாறு, கூறினர்.

