/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
/
விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஏப் 19, 2025 03:04 AM
கோவை: கோவையில் விவசாயிகள் சேமித்துள்ள விதைகளை முழு பரிசோதனை செய்ய, கோவை விதைப்பரிசோதனை நிலையம் துணை இயக்குனர் நர்கீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை விதைப்பரிசோதனை நிலைய உதவி இயக்குனர் நர்கீஸ் கூறியிருப்பதாவது:
கோடை மழை பெய்து வருவதால், விதைப்புக்கு வாய்ப்புள்ள விவசாயிகள், தங்கள் விதைக்குவியல்களில் இருந்து, விதை மாதிரிகளை எடுத்து, கோவை தடாகம் ரோட்டில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி, விதைப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
விதையின் தரம், புறத்துாய்மை, முளைப்புத்திறன். பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை துல்லியமாக தெரிந்து கொண்டு, விதைப்பு செய்யலாம்.
இந்த பரிசோதனையில் விதையின் தரமறிந்து, அளவு தெரிந்து விதைத்தால், நல்ல மகசூலும் வருவாயும் கிடைக்கும். விவசாயிகள் இது தொடர்பாக, விதைப் பரிசோதனை நிலையத்தை அணுகலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.