/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எம்., கிசான் நிதி பெற விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை அவசியம்
/
பி.எம்., கிசான் நிதி பெற விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை அவசியம்
பி.எம்., கிசான் நிதி பெற விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை அவசியம்
பி.எம்., கிசான் நிதி பெற விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை அவசியம்
ADDED : ஜூன் 23, 2025 11:35 PM
கோவை; பிரதமரின் கிசான் சம்மான் நிதி மற்றும் பயிர் காப்பீடு திட்டம் போன்ற திட்டங்களில் பயனடைய, தனித்துவ அடையாள அட்டை அவசியம் என்பதால், 30க்குள் விவசாயிகள் பதிவேடு திட்டத்தில், இலவசமாக பதிவு செய்துகொள்ள வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி அறிக்கை:
கோவை மாவட்டத்தில், 85 ஆயிரத்து, 429 விவசாயிகள் உள்ளனர். பி.எம்., கிசான் திட்டத்தில், 68 ஆயிரத்து, 596 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். விவசாயிகள் பதிவேடு திட்டத்தில், இதுவரை, 39 ஆயிரத்து, 26 பேர் மட்டும் தனித்துவ அடையாள எண் பெறுவதற்கு பதிவு செய்துள்ளனர்.
விவசாயிகள் பல்வேறு அரசு திட்டங்களில் பலன் பெற, தங்களது நில உடமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையிலும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் உரிய நேரத்தில் பயன் பெறவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க, வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், தொலைபேசி எண், நில உடமை விவரங்களையும் விடுபடுதல் இன்றி இணைக்கும் பணி, வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் நடக்கிறது. பொது சேவை மையங்களிலும் பதிவு செய்யலாம்.
நடப்பு நிதியாண்டு முதல் பி.எம்., கிசான் நிதி, பயிர் காப்பீடு திட்டம் போன்ற மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன் பெற, தனித்துவ அடையாள எண் மிக அவசியம். வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களுக்கு சென்று, 30க்குள் கட்டணமின்றி பதிவு செய்யலாம்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.