sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சாலை ஓரத்தில் எண்ணெய் குழாய் பதிக்க வேளாண் அமைச்சரிடம் விவசாயிகள் மனு

/

 சாலை ஓரத்தில் எண்ணெய் குழாய் பதிக்க வேளாண் அமைச்சரிடம் விவசாயிகள் மனு

 சாலை ஓரத்தில் எண்ணெய் குழாய் பதிக்க வேளாண் அமைச்சரிடம் விவசாயிகள் மனு

 சாலை ஓரத்தில் எண்ணெய் குழாய் பதிக்க வேளாண் அமைச்சரிடம் விவசாயிகள் மனு


ADDED : ஜன 06, 2026 05:13 AM

Google News

ADDED : ஜன 06, 2026 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்: விளை நிலங்கள் வழியே எண்ணெய் குழாய் பதிப்பதை கைவிட்டு, சாலை ஓரங்களில் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மத்திய அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோட்டில் நடந்த பா.ஜ. விவசாயி அணி விழிப்புணர்வு மாநாட்டில் பங்கேற்க வந்த மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம், ஐ.டி.பி.எல்., பெட்ரோல் குழாய் பதிக்கும் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், ரவிக்குமார் ஆகியோர் அளித்த மனு விபரம்:

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐ.டி.பி.எல்., நிறுவனம் சார்பில், கோவை இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனஹந்தி வரை 340 கி.மீ., தூரத்துக்கு எண்ணெய் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.

அதில், 270 கி.மீ., தூரத்துக்கு, சாலை ஓரம் குழாய் பதிக்கப்படுகிறது. ஆனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 70 கி.மீ., தூரத்துக்கு விளைநிலங்கள் வழியே குழாய் பதிக்க திட்டமிடப்பட்டது. பாதிக்கப்படும் விவசாயிகளின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் எந்த திட்டத்துக்கும் எதிரானவர்கள் இல்லை.

விளை நிலத்தில் குழாய் பதிப்பதால், நிலத்தின் மதிப்பு பூஜ்யமாகி விட்டது. வங்கிகளில் கடன் கொடுப்பதில்லை. எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. விளைநிலங்களை தவிர்த்து, சாலை ஓரமாக குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us