/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் வசதி செய்து தராத பேரூராட்சி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
/
குடிநீர் வசதி செய்து தராத பேரூராட்சி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
குடிநீர் வசதி செய்து தராத பேரூராட்சி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
குடிநீர் வசதி செய்து தராத பேரூராட்சி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 14, 2025 09:22 PM

மடத்துக்குளம்; அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே நிலத்தடி நீர் மாசடைந்த பகுதியில், குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பேரூராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எரிசாராய ஆலை அமைந்துள்ளது. அருகிலுள்ள விளைநிலங்களில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாக, மாவட்ட சுகாதார அலுவலர் ஆய்வில் தெரிய வந்தது.
இதையடுத்து, மாசடைந்த நீரை குடிநீராகவும், கால்நடைகளுக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டது.
அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் இப்பிரச்னை குறித்து மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தினரால், அப்பகுதியில், குடிநீர் வசதி ஏற்படுத்த கள ஆய்வு செய்து கருத்துரு தயாரித்தனர்.
அக்கருத்துரு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், நேற்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பிரச்னை குறித்து பேசினர். ஆனால், பேரூராட்சி நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிக்காததால், அலுவலகத்தில், விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். இதனால், அப்பகுதியில், பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.