/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாமாயிலுக்கு தடை கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
பாமாயிலுக்கு தடை கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 02, 2025 10:26 PM
அன்னுார்; பாமாயிலுக்கு தடை கோரி, விவசாயிகள் செம்மாணி செட்டிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், 100 நாட்கள், 100 ரேஷன் கடைகள் முன் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி, செம்மாணி செட்டிபாளையத்தில் உள்ள பகுதி நேர ரேஷன் கடை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.  இதில் விவசாயிகள் பேசுகையில், 'பாமாயில் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு மானிய விலையில் பாமாயில் வழங்குவதற்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்.  ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரைக்கு பதில் தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும். கட்டுபடியாகும் விலை நிர்ணயிக்க வேண்டும்,' என்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இதில் அன்னுார் மற்றும் கஞ்சப்பள்ளி பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.

