ADDED : ஏப் 04, 2025 11:45 PM
அ நிறம் | அளவு
சூலுார்; ஜே.கிருஷ்ணாபுரம் மற்றும் வஞ்சி புரம் பகுதியில் முட்டை கோழிப்பண்ணை துவக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள், பொதுமக்கள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இரு நிர்வாகிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. போலீசார், அங்கு சென்று இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளதாகவும், கோழிப்பண்ணையில் ஆய்வு செய்வதாகவும் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
