ADDED : ஏப் 29, 2025 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்,; ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்க கோரி அரசூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மேற்கு அரசூர் ரேஷன் கடை முன் நடந்த போராட்டத்தில், வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும்.
தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதை அமல் படுத்தினால், உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்,என, விவசாயிகள் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

