sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கலப்பட உரத்தால் பயிர் மகசூல் பாதிப்பு; ஆய்வு செய்ய விவசாயிகள் வேண்டுகோள்

/

 கலப்பட உரத்தால் பயிர் மகசூல் பாதிப்பு; ஆய்வு செய்ய விவசாயிகள் வேண்டுகோள்

 கலப்பட உரத்தால் பயிர் மகசூல் பாதிப்பு; ஆய்வு செய்ய விவசாயிகள் வேண்டுகோள்

 கலப்பட உரத்தால் பயிர் மகசூல் பாதிப்பு; ஆய்வு செய்ய விவசாயிகள் வேண்டுகோள்


ADDED : டிச 03, 2025 06:41 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கலப்பு உரங்களில் செய்யப்படும் கலப்படத்தால், பயிர் மகசூல் பாதிக்கப்படுகிறது. உரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

பொதுவாகவே, வேளாண் துறை மீது விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். வேளாண் ஆய்வுக் கூடங்களில் உள்ள தொழில்நுட்பங்கள், விவசாயிகளின் களத்துக்கு வருவதில்லை.

மானிய இடுபொருட்கள் எனக் கூறி, களிமண் உருண்டைகளையும், களிம்புகளையும் விவசாயிகள் தலையில் கட்டுவதும், மாநகராட்சி பகுதிகளில் மாடித் தோட்ட விதைகளை விற்பதும்தான், விவசாயம் சார்ந்த அரசுத் துறைகளின் முக்கிய பணியாக உள்ளதாக, குற்றம்சாட்டுகின்றனர். இப்போது மற்றொரு முக்கிய குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. அது, கலப்பு உரத்தில் கலப்படம்.

இரண்டு அல்லது மேற்பட்ட நேரடி உரங்களை, தேவையான விகிதத்தில் கலந்து விற்பனை செய்வது, கலப்பு உரம் எனப்படுகிறது. அம்மோனியம் சல்பேட், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட கலவைகளில், தழை, மணி, சாம்பல் சத்துடன் இந்த உரங்கள் வழங்கப்படுகின்றன. இந்த கலப்பு உரங்களில், மணல், மக்கிய உரம் கலந்து விற்பதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி கூறியதாவது:

என்.பி.கே.எனப்படும் இரண்டு அல்லது மூன்று சத்துகளைக் கலந்து, கலப்பு உரம் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டு உரம், கலப்பு உரம் என இரண்டும் பயன்பாட்டில் இருக்கிறது. கலப்பு உரத்தில் 10ம் நம்பர், 3ம் நம்பர் என யூரியா, சூப்பர் பொட்டாஷ் கலந்து விற்கின்றனர்.

உரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் குறிப்பிட்ட பருவங்களில், நம் மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி உரம் எவ்வளவு இருக்கிறது என, இருப்பு அறிக்கைதான் வெளியிடுகின்றனரே தவிர, உரத்தில் கலப்படம் குறித்து, ஆய்வு செய்வதில்லை.

ஆய்வு செய்து கலப்படம் கண்டறிந்தாலும், அபராதம் விதிக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை. தரக்குறைவான உரம் பயன்படுத்தியதால், மகசூல் குறைந்து நஷ்டம் ஏற்படுகிறது.

இதை உரிய நிபுணர்கள் ஆய்வு செய்து, தரமற்ற உரத்தால்தான் நஷ்டம் ஏற்பட்டது என ஆய்வறிக்கையை உரக்கட்டுப்பாட்டு அலுவலர்களோ வேளாண்துறையோ வழங்கினால், அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட உர நிறுவனத்துக்கு எதிராக, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, விவசாயிக ள் நிவாரணம் தேட முடியும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில், ஆய்வுச்சான்று வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இரண்டு அல்லது மேற்பட்ட நேரடி உரங்களை, தேவையான விகிதத்தில் கலந்து விற்பனை செய்வது, கலப்பு உரம் எனப்படுகிறது. அம்மோனியம் சல்பேட், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட கலவைகளில், தழை, மணி, சாம்பல் சத்துடன் இந்த உரங்கள் வழங்கப்படுகின்றன.






      Dinamalar
      Follow us