/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பையுடன் பி.ஏ.பி., தண்ணீர்; கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
/
குப்பையுடன் பி.ஏ.பி., தண்ணீர்; கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
குப்பையுடன் பி.ஏ.பி., தண்ணீர்; கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
குப்பையுடன் பி.ஏ.பி., தண்ணீர்; கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
ADDED : ஜூலை 30, 2025 08:23 PM
- நமது நிருபர் -
பி.ஏ.பி., வாய்க்காலில் கடந்தாண்டு முதல் மற்றும் நான்காம் மண்டல பாசனத்திற்கு இரண்டு சுற்று தண்ணீர் மட்டுமே விடப்பட்டது.
இதனால், பாசனம் நடந்த பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு நீண்ட காலப் பயிரான தென்னை மரங்கள் குற்றுயிரும் குலை உயிருமாக காட்சியளிக்கிறது. கால்நடை விவசாயிகள் வைக்கோலை வாங்கி நிலைமையை சமாளித்து வருகின்றனர்.
இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, வழக்கமாக ஆகஸ்ட்டில் திறக்கப்படும் தண்ணீர் இந்தாண்டு ஜூலை மாதத்திலேயே திறக்கப்பட்டுள்ளது.
திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அது பொங்கலுார் வழியாக காங்கயம், வெள்ளகோவில் நோக்கிச் சென்றது.
தண்ணீருடன் வழி எங்கும் வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் என பல டன் அளவுள்ள குப்பை நிரம்பி கிடந்தது. இவை அனைத்தும் வாய்க்காலில் அடித்து வரப்பட்டது. வாய்க்காலில் இருந்து வழி நெடுகிலும் உள்ள குப்பையை பொக்லைன் இயந்திரம் வாயிலாக வெளியே எடுத்து அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. அதன்பின்னரே தண்ணீர் வாய்க்காலில் பாய்ந்து சென்றது.
எத்தனை முறை முறையிட்டாலும், அரசு கண்டுகொள்ளாமல் குப்பையை வாய்க்காலில் கொட்ட அனுமதிக்கிறது என்று, விவசாயிகள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

