ADDED : அக் 17, 2026 08:16 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: வேளாண்மை துறையின், அட்மா திட்டத்தின் கீழ், பயிர் பல் வகைப்படுத்துதல் என்ற தலைப்பில், உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி வகுப்பு தென்னமநல்லூரில் நடந்தது.
தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் (பொ) முகமது தாரிக் தலைமை வகித்து, வேளாண்மை துறையில் உள்ள மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள், மானியங்கள், பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி குறித்தும் விளக்கினார்.
ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை துணை இயக்குனர்கள் கிருஷ்ணகுமார், ராஜேந்திரன், சிவகுருநாதன், கண்ணன் ஆகியோர் உலக உணவு தினம் மற்றும் பல்வகை பயிர் சுழற்சி முறைகள், உணவு உற்பத்தியில் விவசாயிகளின் முக்கிய பங்கு, உணவு உற்பத்தி செய்வதில் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
