/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்குகளால் உயிர் இழப்பீட்டை தடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
/
வனவிலங்குகளால் உயிர் இழப்பீட்டை தடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
வனவிலங்குகளால் உயிர் இழப்பீட்டை தடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
வனவிலங்குகளால் உயிர் இழப்பீட்டை தடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ADDED : ஜன 18, 2024 01:25 AM
பெ.நா.பாளையம் : வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, 10 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வனவிலங்கு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வனவிலங்கு, மனித மோதலில் உயிரிழப்பு அல்லது நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை, 4 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக கடந்த, 2021ம் ஆண்டு உயர்த்தப்பட்டது.
ஆனாலும், மனித, வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூடுதல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என, அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இத்தகைய நிகழ்வுகளில் பாதிக்கப்படும் குடும்பங்களின் சிரமங்களை போக்க, மனித உயிரிழப்பு மற்றும் நிரந்தர இழப்புக்கான இழப்பீட்டுத் தொகையை, 5 லட்சம் ரூபாயில் இருந்து, 10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், 'வனவிலங்கு தாக்கி உயிர் இழந்தவர்களுக்கான இழப்பீடு தொகை, தமிழக அரசு உயர்த்தி வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், உயிர் இழப்பீடு உயர்த்தி தர முன்வந்த அரசு, உயிர் இழப்பீட்டை தடுக்கவும், விவசாய பயிர்களை காப்பாற்றவும், ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகள் தாக்கி, உயிர் இழப்பவர்கள் பெரும்பாலும் குடும்பத்தை வழிநடத்தும் குடும்ப தலைவர்களாக உள்ளனர். உயிர் இழப்பீடு எத்தனை கொடுத்தாலும், உயிர் இழந்தவர் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாது.
வனவிலங்குகளை வன எல்லைக்கு வெளியே வராமல் தடுத்து, மனித உயிரிழப்பையும், வனவிலங்கு உயிர் இழப்பையும் தடுப்பது தான் சரியான தீர்வு.
இதைத்தான் விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்து நீண்ட காலமாக காத்துக் கிடக்கின்றனர்.
வனவிலங்கு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி, மனித உயிர்களையும், விவசாய பயிர்களையும் காப்பாற்ற வேண்டும்' என்றனர்.