/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுத்தை தாக்கி ஆடு,மாடுகள் உயிரிழப்பு:நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
சிறுத்தை தாக்கி ஆடு,மாடுகள் உயிரிழப்பு:நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
சிறுத்தை தாக்கி ஆடு,மாடுகள் உயிரிழப்பு:நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
சிறுத்தை தாக்கி ஆடு,மாடுகள் உயிரிழப்பு:நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : நவ 02, 2025 10:11 PM
மேட்டுப்பாளையம்:  சிறுத்தை தாக்கி ஆடு, மாடுகள் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதால், விலங்குகளின் பாதுகாப்புக்கும், விவசாயிகளின் தற்காப்புக்கும் உயிர் பாதுகாப்புக்கும், துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேணுகோபால், அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளார்.
காரமடை அடுத்த வெள்ளியங்காடு அருகேயுள்ள முத்துக்கல்லூரில், விவசாயி கோவிந்தராஜ்  தோட்டத்தில் கட்டியிருந்த, இரண்டு வயது கன்றுக் குட்டியை சிறுத்தை தாக்கி கொன்றது. இதனால் இப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
காரமடை அருகே வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர், முத்துக்கல்லூர் ஆகிய பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளன. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் முத்துக்கல்லூரில் கோவிந்தராஜன் மாட்டுக் கன்றுக் குட்டியை சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது.
காரமடை வனத்துறையினர், கால்நடை டாக்டரை வைத்து பிரேத பரிசோதனை செய்ததில், சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்தது என தெரியவந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிந்தராஜ் தோட்டத்தில், மூன்று கன்றுக் குட்டிகளை, சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது. இது அல்லாமல்  சுற்றுப் பகுதியில் விவசாயிகள் வளர்த்து வந்த, பத்துக்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளையும் சிறுத்தைகள் கொன்றுள்ளன.
சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. இரவில் ஆடு, மாடுகளை கண்காணிக்க வரும் விவசாயிகளின் உயிருக்கு,  பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிறுத்தைகள் நடமாட்டத்தால், இப்பகுதி விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து, கால்நடைகள் வளர்ப்பை தவிர்த்து வருகின்றனர்.
சிறுத்தைகள் தாக்கி உயிரிழந்த கால்நடைகளுக்கு, உரிய இழப்பீட்டுத் தொகையை, அரசு உடனே வழங்க வேண்டும்.  காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் ஆகிய  கிராமங்களில், சிறுத்தைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன.
இந்த சிறுத்தைகளிடம் இருந்து ஆடு, மாடுகளை பாதுகாக்கவும், இரவில் கால்நடைகளை, கண்காணிக்கும் விவசாயிகளின் உயிர் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு, தற்காப்புக்காக விவசாயிகள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும்.
சிறுத்தை பிரச்னைக்கு வனத்துறை நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு மாநில தலைவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

