/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளியங்காட்டில் புதிய துணை மின் நிலையம் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
/
வெள்ளியங்காட்டில் புதிய துணை மின் நிலையம் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
வெள்ளியங்காட்டில் புதிய துணை மின் நிலையம் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
வெள்ளியங்காட்டில் புதிய துணை மின் நிலையம் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : டிச 29, 2025 05:09 AM
கோவை: விவசாயிகள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக, வெள்ளியங்காட்டில் புதியதாக துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள், கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காரமடை அருகே உள்ள மருதுாரில், 25 எம்.வி.ஏ., மற்றும் 16 எம்.வி.ஏ., திறன் கொண்ட இரு துணைமின் நிலையங்கள் அமைத்து, 41 எம்.வி.ஏ., திறனுக்கு, காரமடை நகராட்சி மற்றும் பிளிச்சி, சிக்காரம் பாளையம், மருதுார், காளம்பாளையம், கெம்மாரம்பாளையம், வெள்ளியங்காடு, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்துக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
மின்வாரியத்தால் நிர்ணயித்த இலக்கு, 70 சதவீதம். ஆனால், 90 சதவீதம் மின்சாரத்தை சப்ளை செய்கிறது. மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கோ, தொழிற்சாலைகளுக்கோ மின்சப்ளை வழங்க வேண்டும் என்றால் வெள்ளியங்காட்டில் மேலும் ஒரு டிரான்ஸ்பார்மர் அமைத்து புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.
இதற்கான வேண்டுகோளையும் அதற்கான 1.5 ஏக்கர் இட அனுமதியையும், தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம், மின்வாரியத்துக்கு அனுப்பிவிட்டது.
மின்வாரியம் விலை நிர்ணயம் தொடர்பாக, மாவட்ட வருவாய்த்துறைக்கு அனுப்பியது.
வருவாய்த்துறை அந்த இடத்துக்கான நில மதிப்பை நிர்ணயித்து, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு அனுப்பிவிட்டது. நிலமதிப்பு குறைவாக உள்ளதாகவும் உயர்த்தி வழங்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளதால், துணை மின் நிலையம் அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
விலை நிர்ணயம் தொடர்பான பிரச்னைக்கு விரைவாக தீர்வு எட்டப்பட்டால், துணை மின் நிலையமும் விரைவில் அமைக்கப்படும் விவசாயிகளுக்கு தேவைப்படும் திறனுக்கு மின்சாரத்தை சப்ளை செய்ய முடியும் மக்களும் பயனடைவர். என்று கோவை சுரேஷ் உள்ளிட்டோர் கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளனர். கலெக்டர் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.

