/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எண்ணெய் குழாய் பதிக்க இடைக்கால தடை: விவசாயிகள் வரவேற்பு
/
எண்ணெய் குழாய் பதிக்க இடைக்கால தடை: விவசாயிகள் வரவேற்பு
எண்ணெய் குழாய் பதிக்க இடைக்கால தடை: விவசாயிகள் வரவேற்பு
எண்ணெய் குழாய் பதிக்க இடைக்கால தடை: விவசாயிகள் வரவேற்பு
ADDED : டிச 04, 2024 10:20 PM
சூலுார்; விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணிக்கு கோர்ட் இடைக்கால தடை வழங்கி உத்தரவிட்டுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில், கோவை மாவட்டம் இருகூரில் இருந்து , திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூலுார் வட்டார விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தினர்.
தற்போது, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராவத்தூரை சேர்ந்த விவசாயி கணேசன் மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, திட்டத்தை செயல்படுத்துவதற்கு இடைக்கால தடை பெற்றுள்ளனர். இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சூலுார் விவசாயிகள் கூறுகையில்,உரிய அனுமதி பெறாமல், பழைய அனுமதியை வைத்து புது திட்டத்தை செயல்படுத்துவதை ஏற்க முடியாது. பணிக்கு இடைக்கால தடை உத்தரவு கோர்ட் வழங்கியிருப்பது வரவேற்புக்கு உரியது.
மேலும், பல விவசாயிகள் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளனர், என்றனர்.