/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மல்ஷீங் ஷீட்' அமைத்து சாகுபடி செய்யும் விவசாயிகள்
/
'மல்ஷீங் ஷீட்' அமைத்து சாகுபடி செய்யும் விவசாயிகள்
'மல்ஷீங் ஷீட்' அமைத்து சாகுபடி செய்யும் விவசாயிகள்
'மல்ஷீங் ஷீட்' அமைத்து சாகுபடி செய்யும் விவசாயிகள்
ADDED : அக் 30, 2024 08:20 PM
உடுமலை; உடுமலை வட்டாரத்தில், ஆண்டியகவுண்டனுார், குட்டியகவுண்டனுார், எலையமுத்துார், கிளுவங்காட்டூர், கண்ணமநாயக்கனுார், பெரிசனம்பட்டி உட்பட பகுதிகளில், காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது.
ஆண்டு முழுவதும், சுழற்சி முறையில், தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய், காலிபிளவர், வெண்டை மற்றும் குறிப்பிட்ட சீசன்களில், தர்பூசணி, சாம்பல் பூசணி, பூசணி உட்பட தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
இவ்வகை சாகுபடியில், விதைப்பு முதல் பல கட்ட அறுவடைக்கு, தொழிலாளர்கள் தேவை அதிகமுள்ளது. குறிப்பாக, பயிர்களின் வளர்ச்சித்தருணத்தில், களையெடுக்கவும், உரமிடவும் தொழிலாளர்களுக்காக கணிசமாக செலவிட வேண்டியுள்ளது.
இதனால், விவசாயிகள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கைகொடுக்க துவங்கியுள்ளன.
அவ்வகையில், தோட்டக்கலைத்துறையினர் பரிந்துரைக்கும், 'மல்ஷிங் ஷீட்' முறையை, உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் அதிகளவு பின்பற்ற துவங்கியுள்ளனர்.
இம்முறையில், விளைநிலங்களில் மேட்டுப்பாத்தி அமைத்து, அதன் மேல், மல்ஷீங் ஷீட்டை பரப்புகின்றனர். செடிகள் நடுவதற்கு ஏற்ப, இந்த ஷீட்டில், இடைவெளி விடப்பட்டுள்ளது.
அந்த இடத்தில், நாற்றுகளை நடவு செய்த பின்னர், செடியின் அருகிலேயே சொட்டு நீர் பாசனம் வாயிலாக நீர் பாய்ச்ச முடியும். செடிகளுக்கு மட்டும் தண்ணீர் கிடைப்பதால், களைகள் முளைக்காது. நடப்பு சீசனில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், இந்த தொழில்நுட்பத்தை விவசாயிகள் பின்பற்றி, பல்வேறு காய்கறி சாகுபடியை துவக்கியுள்ளனர்.