/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடந்தாண்டு ரூ.91 லட்சத்துக்கு கொப்பரை விற்ற விவசாயிகள்
/
கடந்தாண்டு ரூ.91 லட்சத்துக்கு கொப்பரை விற்ற விவசாயிகள்
கடந்தாண்டு ரூ.91 லட்சத்துக்கு கொப்பரை விற்ற விவசாயிகள்
கடந்தாண்டு ரூ.91 லட்சத்துக்கு கொப்பரை விற்ற விவசாயிகள்
ADDED : பிப் 16, 2024 11:52 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வாயிலாக, 2023 - 24ம் ஆண்டில், 1,149 மெட்ரிக் டன் அளவுக்கு கொப்பரை மற்றும் தேங்காய் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு சுற்று வட்டார விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை இங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்கவும், ஏல முறையில் விற்பனை செய்யவும் தீவிரம் காட்டுகின்றனர்.
விற்பனை கூடத்தின் வாயிலாக, 2023 - 24ம் ஆண்டில், 'இ - நாம்' வாயிலாக, 559 மெட்ரிக் டன் அளவு கொப்பரை மற்றும் தேங்காய், 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மற்றும் பண்ணை வயல் வாயிலாக, 589 மெட்ரிக் டன் அளவு தேங்காய், 36 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 1,149 மெட்ரிக் டன் கொப்பரை மற்றும் தேங்காய், 91 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதில், 114 விவசாயிகள் மற்றும் 60 வியாபாரிகள் பயனடைந்தனர். விற்பனை கூடத்தில், கொப்பரை இருப்பு வைத்த, 50 விவசாயிகளுக்கு, 1.5 கோடி ரூபாய் பொருளீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.