தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பள்ளிகளில் விவசாயத்தை தனிப்பாடமாக்க வேண்டும்'

'பள்ளிகளில் விவசாயத்தை தனிப்பாடமாக்க வேண்டும்'

'பள்ளிகளில் விவசாயத்தை தனிப்பாடமாக்க வேண்டும்'


ADDED : பிப் 17, 2025 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 11:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; விவசாயத்தை தனிப்பாடமாக அறிவித்து நடைமுறைப்படுத்த, மாவட்ட ஐக்கிய ஜனதா தளம் சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் தலைவர் தியாகராஜ் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆனால், விவசாயம் குறித்த பாடத்திட்டம் இல்லை.

பிளஸ் 2க்கு பின்னரே விவசாயம் குறித்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதைக்கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை விவசாயம் சார்ந்த தனிப்பாடத்திட்டத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.

மாநிலத்தில் பசுமை அதிகரிக்கவும், நிலத்தின் தன்மையை மாணவர்கள் அறியவும் இது உதவும். பஞ்சத்தையும் தடுக்க முடியும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us