/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹிந்துஸ்தான் கல்லுாரியில் பேஷன் ஷோ
/
ஹிந்துஸ்தான் கல்லுாரியில் பேஷன் ஷோ
ADDED : ஆக 07, 2025 10:01 PM

கோவை; ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி மற்றும் காதி, கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் ஆடை அலங்கார அணிவகுப்பு நடந்தது.
சென்னை காதி, கிராம தொழில்கள் ஆணையம் மற்றும் ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி சார்பில் காதி நாடகம், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் கல்லுாரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறை மாணவர்கள் இரு தலைப்புகளில் நாடகங்களை நடத்தினர். தொடர்ந்து தேசத்துக்கான காதி பேஷன் - காதி தி வோக் - காதியுடன் இந்தியாவை மேம்படுத்துதல் எனும் கருத்தில் மாணவர்கள் பங்கேற்ற ஆடை, அலங்கார அணி வகுப்பு போட்டிகள் நடந்தன. இதில், கோவை, திருப்பூர், சேலம், சத்தியமங்கலத்தை சேர்ந்த ஏழு கல்லுாரிகளின் மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டிகளின் முடிவில், முதல் மூன்று பரிசுகளை திருப்பூர், நிப்ட் - டி.இ.ஏ., நிட்வேர் பேஷன் கல்லுாரி, சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப நிறுவனம், கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி ஆகிய கல்லுாரிகள் வென்றன. முதல் பரிசாக, ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசாக ரூ.1,000 வழங்கப்பட்டது.
காதி, கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி வரவேற்றார். ஹிந்துஸ்தான் கல்வி குழுவின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக அறங்காவலர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.