/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மசோதாவை ரத்து செய்யக்கோரி பிப்., 9ம் தேதி உண்ணாவிரதம்
/
மசோதாவை ரத்து செய்யக்கோரி பிப்., 9ம் தேதி உண்ணாவிரதம்
மசோதாவை ரத்து செய்யக்கோரி பிப்., 9ம் தேதி உண்ணாவிரதம்
மசோதாவை ரத்து செய்யக்கோரி பிப்., 9ம் தேதி உண்ணாவிரதம்
ADDED : ஜன 24, 2025 10:14 PM
வால்பாறை, ; 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்க அமைப்பின் ஆலோசனைக்கூட்டம், வால்பாறை தனியார் கலையரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு, எல்.பி.எப்., தொழிற்சங்க செயலாளர் வினோத்குமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், வால்பாறையில், தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'சூழல் நுண் உணர்வு மசோதா' வரைவு அறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
வால்பாறை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மசோதாவை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி, வால்பாறை நகரில்பிப்., 9ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், தொழிற்சங்க பொதுச்செயலாளர்கள் கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,) கேசவமருகன் (எல்.எல்.எப்.,), பரமசிவம் (சி.ஐ.டி.யு.,) கல்யாணி (எம்.எல்.எப்.,) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

