நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், சங்கர் சமூக நீதி அறக்கட்டளை சார்பில், நேற்று காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்கள், பணியிடங்கள், பொது இடங்கள், பள்ளி, கல்லுாரி என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மாவட்டங்கள் தோறும் விசாகா கமிட்டி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும், புகார் அளிக்க வரும் பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.